கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி -சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
திருச்சி , 11 ஏப்ரல் (ஹி.ச.) கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி -சென்னை இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நெல்லை சென்னை எழும்
Special Train Service


திருச்சி , 11 ஏப்ரல் (ஹி.ச.)

கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி -சென்னை இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நெல்லை சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06070) வருகிற 16, 23 மற்றும் 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை) நெல்லையில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சி ஜங்ஷனுக்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்து 4.30 மணிக்கு புறப்பட்டுசெல்லும்.

இதேபோல் மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் நெல்லை அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06069) வருகிற 17, 24 மற்றும் மே மாதம் 1-ந்தேதிகளில் (வெள்ளிக் கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் நள்ளிரவு 1 மணிக்கு நெல்லை சென் றைடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு இரவு 7. 35 மணிக்கு வந்து 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06166) வருகிற 12, 19 மற்றும் 26-ந்தேதிகளில் (ஞாயிற் றுக்கிழமை) நெல்லையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.35 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு காலை 6 மணிக்கு வந்து 6.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல் மறு மார்க்கமாக தாம்பரம் நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்

(வண்டி எண்: 06165) வருகிற 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த ரெயிலானது திருச்சிக்கு இரவு 7 மணிக்கு வந்து 7.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b