ஜோசப் கிருஷ்ணாவா? ஜோசப் விஜயா? - நயினார் நாகேந்திரன் கிண்டல்
சிவகங்கை, 11 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன
நயினார்


சிவகங்கை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிங்கம்புணரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஜனநாயகன் திரைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதற்கு காரணம் எல்.முருகனும், உதயநிதியும் காரணம் என ஆதவ் அர்ஜூனாவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

அதற்கு பதிலளித்த அவர்,

சென்சார் போர்டு தணிக்கை குழு என்பது ஒரு இண்டிபெண்டன்ட் பாடி என்றும் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை எல்லா இடங்களிலும் நிலவி வருவதாக கூறிய அவர், அதனால் தான் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தேர்தலை சந்திக்கிறது திமுக என்றும் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வாக்குக்கு 2000 முதல் 3000 வரை ரூபாய் கொடுத்து வருவதாகவும் செந்தில் பாலாஜி கோயம்புத்தூரில் வாக்குக்கு தங்க நாணயம் வழங்கி வருவதாகவும் கூறி பகீர் கிளப்பினார்.

தொடர்ந்து விஜய் குறித்து விமர்சனம் செய்யும் போது ஜோசப் கிருஷ்ணாவா? ஜோசப் விஜயா? என கிண்டலடித்து பேசினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P