Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 11 ஏப்ரல் (ஹி.ச.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
லட்சோபலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்
தீவிரத்தை மனதாரப் பாராட்டுவதாகவும் இது வெறும் வார்த்தைகள் அல்ல, இந்த
வெயிலிலும் காத்துக் கிடக்கிற உங்களைப் பார்ப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
மேலும், அன்னியூர் சிவா ஒரு எம்.எல்.ஏ-வாக இருந்து கொண்டு, எம்பி ரவிக்குமார் அவர்களைச் சந்தித்து, டெல்லி வரை சென்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவர் என்றும் வி.கூட்ரோடு மற்றும் முண்டியம்பாக்கம் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்க அவர் எடுத்த முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும் கூறினார்.
அன்னியூர் சிவா சாதி, மதம் பார்க்காமல் எல்லோரோடும் இணக்கமாகப் பழகக்கூடியவர் என்றும் விழுப்புரம் தொகுதி மக்கள் அளித்த ஆதரவால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்
பி.எஸ்.பி (மாயாவதி), பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி, மகாராஷ்டிராவில் ராம்தாஸ் அத்வாலே கட்சிக்கு அடுத்தபடியாக, ஒரு அம்பேத்கர் இயக்கம் மாநிலக்
கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால் அது விசிக தான் என பெருமிதம் கூறினார்.
விஜய் கூப்பிடுகிறார், எடப்பாடி அழைக்கிறார், அங்கே போனால் அதிக சீட்டுகள்
தருவார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் நான் ஆதாயத்திற்காகப்
போகவில்லை.கொள்கைக்காகவே திமுகவுடன் இருக்கிறேன் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பி
வையுங்கள் என்றவர், சட்டமன்றத்தில் விசில் அடிக்க முடியாது, பெஞ்சை வேண்டுமென்றால்
தட்டலாம் விசில் அடிக்க முடியாது விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை மறுபடியும் அவரை தியேட்டருக்கு அனுப்பி வையுங்கள் எனக்கூறி திருமாவளவன் தனது உரையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P