Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் 16 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக, 2026 தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக வருகையால், தனது கோட்டையைத் தக்கவைக்கப் போராடிவருகிறது.
குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுக சார்பில் களம்காணும் கார்த்திக் மோகன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் விதமாக சென்னை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் சேகர்பாபு இன்று (12.04.2026) அனைத்து அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கலந்துகொண்டார். மேலும் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மகளிர் அணி, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், உதயசூரியன் சின்னத்தின் வெற்றிக்காகத் தீவிரமாகக் களப்பணியாற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b