Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அதற்கான களப்பணி ஆற்றி வருகின்றது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று காலை தேர்தல் பிரசாரத்திற்காக கொட்டப்பட்டு பொன்மலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சரின் வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள் எதுவும் இல்லாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தை செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Hindusthan Samachar / vidya.b