Enter your Email Address to subscribe to our newsletters

பரமக்குடி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பரமக்குடிக்கு அவர் சென்றுள்ளார்.
அங்கு, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை இன்று காலை சந்தித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்து, திமுக கூட்டணிக்கு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தங்கள் ஆதரவினை தெரிவித்து, மீனவர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b