ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம்
தஞ்சாவூர், 12 ஏப்ரல் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தென்னக திருப்பதி மற்றும் தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இந்த
Panguni Chariot Festival at Oppiliappan Temple


தஞ்சாவூர், 12 ஏப்ரல் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தென்னக திருப்பதி மற்றும் தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இந்த கோயிலில் பெருமாள் பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று அருள் பாலிக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த ஸ்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது. இங்கு மூலவர் பெருமாளுக்கு அவரது கூற்றுப்படி உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஸ்தலத்தில், பங்குனி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சுமார் 12 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ஆம் நாளான இன்று பங்குனி திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமிதேவி தாயார்களுடன் விசேஷ அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, கோயில் யானை பூமா முன்செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, கேரள ஜெண்டை வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள இசை முழங்க, ஒட்டகங்கள், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா’.. கோஷம் விண்ணை முட்டத் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, 12ஆம் நாளான ஏப்ரல் 15-ம் தேதி (புதன்கிழமை) மூலவர் சன்னதியில் நண்பகல் அன்னப்பெரும்படையலும் மாலை புஷ்ப யாகமும், பின்னர் விடையாற்றி திருவீதியுலாவுடன் இவ்வாண்டிற்கான பங்குனி பிரமோற்சவ பெருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது.

Hindusthan Samachar / vidya.b