நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
புதுக்கோட்டை, 12 ஏப்ரல் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த ஆறு பேர், சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பக
Car Fire


புதுக்கோட்டை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம்

மீமிசலை சேர்ந்த ஆறு பேர், சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கார் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

கடுமையான வெயில் காரணமாக காரின் இயந்திரப் பகுதியில் அதிக வெப்பம் ஏற்பட்டதே தீப்பற்ற காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ வேகமாக பரவியதால், காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். இ

இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுரோட்டில் கார் தீப்பிடித்த இந்த சம்பவம் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரித்து, நீண்ட தூர பயணங்களுக்கு முன் அவற்றின் நிலையை பரிசோதிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN