பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு - சசிகலா இரங்கல்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) பழம்பெரும் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே(92) மும்பையில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sasikala Expresses Condolences


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

பழம்பெரும் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே(92) மும்பையில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

இவரது மறைவிற்கு அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;-

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரைப்படத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் மற்றும் கிராமி விருதுகள் பெற்று சாதனை படைத்து, இசை உலகில் தன்னிகரற்ற ராணியாக விளங்கிய ஆஷா போஸ்லே தனது 80 ஆண்டுகால இசைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

இசை உலகில் மிக அதிக பாடல்களை பதிவு செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ள ஆஷா போஸ்லேவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b