Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளாராக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோவில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடன் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் வலம் வந்தார்.
அடுத்ததாக நிதின் நபின் மதுரை தெற்கு, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் சாலைப் பேரணி மேற்கொள்ள உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P