ஆந்திராவில் தொழில் வளர்ச்சிக்கு அதிரடி முடிவு 30 புதிய தொழிற்துறை கிளஸ்டர்கள் அமைப்பு
அமராவதி , 13 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்த மாநில அரசு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநிலம் முழுவதும் செல்லும் முக்கிய தொழிற்துறை காரிடார்களின் வழித்தடங்களில் 30 புதிய தொழிற
A


அமராவதி , 13 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்த மாநில அரசு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநிலம் முழுவதும் செல்லும் முக்கிய தொழிற்துறை காரிடார்களின் வழித்தடங்களில் 30 புதிய தொழிற்துறை கிளஸ்டர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் சுமார் 1.31 லட்சம் ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது இயங்கிவரும் 20 கிளஸ்டர்களுடன் இவை சேர்க்கப்பட்டால், மொத்த கிளஸ்டர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும்.

மாநிலத்தில் ஏற்கனவே விசாகப்பட்டினம்–சென்னை, சென்னை–பெங்களூரு, ஹைதராபாத்–பெங்களூரு தொழிற்துறை காரிடார்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் விசாகப்பட்டினம்–சென்னை காரிடாரின் முதல் கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மற்ற காரிடார்களில் திருப்பதி, சித்தூர், அனந்தபூர், கர்நூல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்துறை மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த காரிடார்களின் வழித்தடங்களில் தொழில்துறை சூழலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய கிளஸ்டர்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூழ்கும் மற்றும் கடலோர நிலங்கள் தேர்வு

புதிய 30 கிளஸ்டர்களுக்காக மூழ்கும் (வெள்ளப்பெருக்கு) பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலங்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 74,583 ஏக்கர் மூழ்கும் நிலங்களில் 27,000 ஏக்கர், மேலும் 56,608 ஏக்கர் கடலோர நிலங்களில் 36,434 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலங்களில் மூழ்கும் பகுதிகளில் 15 கிளஸ்டர்களும், கடலோரப் பகுதிகளில் மேலும் 15 கிளஸ்டர்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல்சார் வணிகம் மற்றும் மரைடைம் தொழில்களை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பல மாவட்டங்களில் அமைப்பு

இந்த கிளஸ்டர்கள் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், திருப்பதி, சித்தூர், அனந்தபூர், ஸ்ரீ சத்யசாய், கடப்பா, கர்நூல், பிரகாசம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.

அண்டை மாநில நகரங்களுடன் இணைப்பை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளையும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அரசு நிதி ஒதுக்க உள்ள நிலையில், மாநில அரசும் தனது பங்கினை வழங்க உள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆந்திரப் பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்புகள் பெருகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட வாரியான கிளஸ்டர்கள்:

ஸ்ரீகாகுளம்–2, விசாகப்பட்டினம்–4, கிருஷ்ணா–1, குண்டூர்–1, நெல்லூர்–3, திருப்பதி–5, சித்தூர்–4, அனந்தபூர்–3, ஸ்ரீ சத்யசாய்–1, கடப்பா–3, கர்நூல்–1, பிரகாசம்–2.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA