சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்த
வாக்குப்பதிவு


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இந்த தபால் வாக்குப்பதிவில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

மேலும், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அவர்கள் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் தபால் வாக்கு மையங்களில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam