Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன், 13 ஏப்ரல் (ஹி.ச)
உத்தராகண்ட் மாநிலத்தில், டேராடூன் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து ஏறத்தாழ இரண்டரை மணிநேரமாகக் குறைக்கும் வகையில் டேராடூன்-டெல்லி பசுமை வழி சாலையானது ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ளது.
6 வழிகள் கொண்ட இந்த பசுமை வழி சாலையானது 210 கி.மீ. நீளம் கொண்டது. இந்த சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை உத்தராகண்ட் மாநிலத்திற்கு செல்கிறார். அதனுடன், பிரசித்தி பெற்ற தத் காளி மாதா கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனமும் செய்ய இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மந்திரம் உச்சரிக்க இருக்கின்றனர். இதற்காக, கோவிலில் அலங்கார பணிகள், பசுமை வழி சாலையின் நுழைவு பகுதி மற்றும் ஒட்டுமொத்த பசுமை வழித்தடத்திற்கான பணிகளும் நிறைவடைந்து உள்ளன.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இப்பாதுகாப்பு பணிகளை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி நேற்று, மா தாத் காளி கோவிலுக்கு சாலை வழியே நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b