Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன், விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி வருகிறார்கள். அதோடு, மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே மயிலாப்பூர், வடபழனி, கீழ்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் தீடீர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சோதனை முடிந்த பிறகுதான் கைப்பட்டப்பற்ற ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b