கோவையில் லேசர் மூலம் பார்வை திருத்தும் லாசிக் சிகிச்சை முறை
கோவை, 13 ஏப்ரல் (ஹி.ச.) கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெ
வல்


கோவை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன் கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார்.

லேசர் மூலம் பார்வை திருத்தும் லாசிக் சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

6,500 சதுர அடியில் அமைந்துள்ள இக்கிளையில் கண்புரை, ஒளிவிலகல் சிகிச்சை, லாசிக், கார்னியா, விழித்திரை, கண்ணழுத்த நோய், குழந்தைகள் கண் மருத்துவம், நரம்பியல் கண் மருத்துவம், கண் சீரமைப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் கூறியதாவது:

கண் ஆரோக்கியம் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாகும். கோவையில் தொடங்கப்பட்டுள்ள புதிய மையத்தின் மூலம் உலகத் தரமான கண் சிகிச்சையை அனைவருக்கும் எளிதில் வழங்குவதே எங்கள் நோக்கம். கண்ணாடி தேவையற்ற தெளிவான பார்வையை வழங்கி, மக்கள் நம்பிக்கையுடன் வாழ உதவுவதே எங்கள் குறிக்கோள் என்றார்.

புதிய கிளை தொடக்கத்தை முன்னிட்டு ஜூன் 15 வரை சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலவச கண் பரிசோதனை ஆலோசனை, இலவச லாசிக் பரிசோதனை, லாசிக் அறுவை சிகிச்சைக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

மேலும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நபருக்கு இலவச லாசிக் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J