தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 13) கலந்துரையாடினார். தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணி குறித்து நிர்வாகிகளுடன் மோடி காணொலி வாயிலாக விளக்கினார்.
Modi interacts with Booth Committee members


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று

(ஏப்ரல் 13) கலந்துரையாடினார்.

தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணி குறித்து நிர்வாகிகளுடன் மோடி காணொலி வாயிலாக விளக்கினார்.

இந்த நிகழ்வில், எனது பூத் - மிக வலிமையான பூத் என்ற பெயரில், தேர்தலுக்குத் தயாராவது மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணி குறித்து பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கினார்

பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர், நமோ செயலியில் முன்பதிவு செய்து மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரை சேர்ந்த அஜித்குமார், திருவண்ணாமலை தெற்கு தொகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

அப்போது தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பாஜக எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு பாஜக செய்ததை மற்றவர்கள் மறைத்தாலும் மாற்றத்திற்கான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதாகக் கூறினார்.

கோவை கவுண்டம்பாளையத்திற்குட்பட்ட ரம்யாவுடன் கலந்துரையாடிய மோடி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் பணிக்குத் தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் குறித்து மோடி கலந்துரையாடினார்.

Hindusthan Samachar / vidya.b