Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, 6027 வாக்காளர்கள் தபால் வாக்குபதிவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்குட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் 12.04.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றைய தினம் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 352 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்காளர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 305 வாக்காளர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 199 வாக்காளர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மாற்றுதிறனாளி வாக்காளர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 252 நபர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 261 நபர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 101 நபர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 122 நபர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 188 நபர்களும் என திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2340 வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இம்மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் நாள் தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூனியூர் பகுதியில் தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா இன்று (13.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b