Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 13 ஏப்ரல் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் கவுடிபள்ளி காட்டுப்பகுதியில் முக்கியமான தனிநபர் ஆவணங்கள் குப்பைக்குவியலில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை அசட்டுத்தனமாக குப்பையில் தூக்கி எறியப்பட்டிருந்தது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அத்தியாவசியமான இந்த ஆவணங்கள் இவ்வாறு கிடந்தது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், ஆதார் கார்டுகளுடன் சேர்த்து ஓட்டுநர் உரிமங்கள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களும் குப்பையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி மற்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு தொடர்பாக, அந்தப் பகுதியில் பணியாற்றும் தபால்காரர் ஆவணங்களை உரியவர்களுக்கு வழங்காமல் அலட்சியமாக குப்பையில் கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்புடையவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA