Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
கோவில் என்றாலே ' தில்லை ' மரங்களால் சூழப்பட்ட காட்டின் நடுவே எழுந்தருளியுள்ள ' சிதம்பரம் ' என்னும் பெரும் கோவிலாகும்.
சைவ சான்றோர்கள் என்னாட்டவர் ஆயினும், போற்றும் இறைவனாக விளங்கும் கூத்தபிரானும், அவரவரை யான், எனது என்று கூறி, கூத்தாடச் செய்பவனுமாகிய ஸ்தலமும் இதுவே ஆகும்.
'மறை' தழைத்து ஓங்கத் தோன்றிய ஞானசம்பந்தரும் புலையர் குலத்தில் தோன்றிய நந்தனை 'நந்தனார்' எனச் செய்த தலமும்,வாதுரானை திருவாய் மலர இறைவன் தன்கையால் எழுதி, மாணிக்க வாசகன் சொல்ல, சிற்றம்பலத்தான் எழுதியது என்று திருவாசகத்தை வெளியிட சொல்ல,வழி வகுத்ததும் இத்திருதலமே,
மாணிக்க வாசகனை ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகச் செய்ததும், ஐந்து மாதக் குழந்தை பருவத்தில் வள்ளல் பெருமானுக்கு திரை நீக்கி காட்சி அளித்த தலமும் இதுவே ஆகும்.
பஞ்ச தலங்களில் தலையாய தலமாகவும், தெய்வ மணம் கமழும் திருத்தலமாகவும், சிறந்த தலமாகவும் விளங்கி வருகின்ற இத்தில்லையம்பதி உலக சிறப்பு வாய்ந்ததாகும்.
நமது வள்ளற் பெருமானார் இளமையில் தாம் பெற்ற தெய்வ உணர்வால் தில்லைப் பெருமானாகிய ஆடல் அரசராகிய நடராஜப் பெருமானையே தாம் வழிபடும் தெய்வமாகக் கொண்டிருந்தார்.
இத்திருகோயிலில் ஆகம விதிமுறைகளை கையாண்ட போதும், பழமையை -தொன்று தொட்டு வந்த நடைமுறையை விடுத்து, புதுமை புக வழி வகுத்துக் கொண்டிருந்ததை அறிந்த வள்ளற் பெருமானார் மனம் நொந்தார்.
சாதி, மத. சமயங்களை மறந்து எல்லோரும் இறைவனின் மக்கள் என்ற உணர்வு பெற்று, பாகுபாடு இன்றி அன்பிற்கு உறைவிடமாய் விளங்கவேண்டிய திருத்தலம், மாறாக மாசு தோன்ற, சுயநலவாதிகளின் சொர்க்கமாகத் திகழ நேர்ந்தது.
Hindusthan Samachar / Durai.J