ஆறுகளில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் கனிமவளக் கொள்ளை - த.வெ.க வேட்பாளர் அசாருதீன்
தஞ்சாவூர், 13 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் அசாருதீன் பாபநாசம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆறுகளில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் கனிம வளங்களை சு
தவெக


தஞ்சாவூர், 13 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் அசாருதீன் பாபநாசம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஆறுகளில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் கனிம வளங்களை சுரண்டி, மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இது நீர் வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

தவெக ஆட்சி அமைந்தவுடன் இத்தகைய சட்டவிரோத மணல் கொள்ளைகள் முழுமையாக தடுக்கப்படும். நீர் வளங்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மக்கள் நலனையும் இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam