மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பைசாகி திருநாள் வாழ்த்து
புதுடெல்லி, 13 ஏப்ரல் (ஹி.ச.) பைசாகி என்றும் அழைக்கப்படும் வைசாகி, பஞ்சாபி மற்றும் சீக்கிய புத்தாண்டின் தொடக்க நிகழ்வு ஆகும். இது முக்கியமாக வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் கொண்டாடப்படுகிறது. மேலும் இது அறுவடைக் காலத்தின் தொடக்கத்தையும் கு
Union Home Minister Amit Shah extends Baisakhi greetings.


புதுடெல்லி, 13 ஏப்ரல் (ஹி.ச.)

பைசாகி என்றும் அழைக்கப்படும் வைசாகி, பஞ்சாபி மற்றும் சீக்கிய புத்தாண்டின் தொடக்க நிகழ்வு ஆகும். இது முக்கியமாக வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் கொண்டாடப்படுகிறது. மேலும் இது அறுவடைக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பைசாகி திருநாளையொட்டி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

பைசாகி திருநாள் வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

புனிதமான பைசாகி திருநாளில் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்த திருவிழா உங்கள் வாழ்வில் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்.

மகிழ்ச்சி, அமைதி மற்றும் புதிய ஆற்றலை நிரப்பட்டும் என வாழ்த்துகிறேன்.

புனிதமான வைசாகி திருநாளுக்கு அனைவருக்கும் லட்சம் லட்சம் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b