Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 13 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தர பிரதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் குழுவாக பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிரே வந்த லாரியுடன் பஸ் மோதியது. இந்த விபத்து மிகுந்த தாக்கத்துடன் ஏற்பட்டதால் பஸ் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் மாப்பிள்ளையின் தந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA