Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரரும் எம்.பியுமான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
கழகத் தலைவர் அண்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராடுவோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b