சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை அடையாறு பகுதியில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நகைகள் ‘சீக்வல் குளோபல் லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும் படை
நகை


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை அடையாறு பகுதியில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நகைகள் ‘சீக்வல் குளோபல் லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் போது, நகைகளை எடுத்துச் சென்றவர்களிடம் தேவையான ஆவணங்கள் உடனடியாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், அவை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி (IT) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சென்னை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P