Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், தமிழ் மாமன்னன் தீரன் சின்னமலை அவர்களின் 270ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
1756ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பிறந்த தீரன் சின்னமலை, ஆங்கிலேயர் மற்றும் அநீதிக்கு எதிராக போராடிய வீரத் தலைவர்களில் முக்கியமானவர் என குறிப்பிட்டார்.
மைசூர் அரசுக்கு செல்கின்ற வரிப்பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த சம்பவம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அவரது போராட்ட மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகவும், திப்பு சுல்தானுடன் இணைந்து போராடியதிலும் தீரன் சின்னமலையின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.
இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் அவரது வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இன்றைய சூழலில் தமிழ்நாட்டை சுரண்டும் சக்திகளுக்கு எதிராக தீரன் சின்னமலை வழியில் மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயக முறையில் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ