Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 17 ஏப்ரல் (ஹி.ச.)
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது,
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை பார்த்து தவறாக விமர்சனம் செய்தால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜாவும், அண்ணாவும் ஓடிவிட்டனர் எனவும் கூறினார்.
ஆனால் முத்துராமலிங்க தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிக்கைகள் தெளிவுபடுத்தின. அண்ணாமலை இவ்வாறு கட்டுக்கதைகளை கூறி மக்களிடையே கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டுமானால், அரசிடம் அனுமதி பெற்றுவர வேண்டும் என கூறியது.
இதையடுத்து அரசிடம் அனுமதி கொடுக்குமாறு பியூஸ் மனுதாக்கல் செய்தார். அரசும் அனுமதி வழங்கியது.
இதையடுத்து சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அண்ணாமலையை வரும் 20ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b