சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை - அதிமுக நிர்வாகியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.) சென்னையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்
Fly


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் நேற்றிரவு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சந்தேகத்தின் பேரில் பைக் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் வாக்காளர்கள் பட்டியல் ஜெராக்ஸ் நகல்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தவர் அதிமுக 112வது வார்டு மேற்கு வட்டச் செயலாளர் விஜய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், விஜய்யை கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ