சட்டவிரோத மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அவகாசம் நீட்டிப்பு
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.) அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய ஏப்ரல் 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற
Extension of Time Granted to Former Minister M.R. Vijayabhaskar in Illegal Sand Case


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய ஏப்ரல் 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர்க்கு முன் ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம், மார்ச் 31ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, சரணடைவதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b