Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னையில் கணக்கில் வராத ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு தனியார் நகைக்கடைகளில் தொடங்கிய சோதனையின் தொடர்ச்சியாக, Chennai தியாகராய நகர் பகுதியில் உள்ள நகை அடகு கடைகள் மற்றும் தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனைச் சார்ந்த முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது, பட்டுவாடாவிற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனுடன் தொடர்புடையதாக, முகப்பேர் பகுதியில் மைனிங் இணை இயக்குநர் பெருமாள் ராஜா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. தொடர்பாக 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளிலும் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ