‘விக்ஷித் பாரதத்துக்கான நாரி சக்தி’ ஓட்டம் - பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி பங்கேற்பு
பாட்னா, 17 ஏப்ரல் (ஹி.ச.) பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று காலை பாட்னாவில் நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன் அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், ‘விக்ஷித் பாரதம்’ தொலைநோக்கில் குடிமக்களின் பங்கள
‘Nari Shakti for Vikshit Bharat’ Run


பாட்னா, 17 ஏப்ரல் (ஹி.ச.)

பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று காலை பாட்னாவில் நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன் அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், ‘விக்ஷித் பாரதம்’ தொலைநோக்கில் குடிமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய விவாதங்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில் ‘விக்ஷித் பாரதத்துக்கான நாரி சக்தி’ ஓட்டத்தை முதல்வர் சாம்ராட் சவுத்ரி பாட்னாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஷ்ரேயாசி சிங் கூறுகையில் ,

இந்த நாள் “வரலாற்று சிறப்புமிக்க நாள்” . பிரதமர் மோடியின் முயற்சியால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை வரவேற்கிறேன். பிரதமர் மோடியின் முயற்சியால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிஜமாகப் போகிறது.

வாக்குச்சாவடியிலும், கட்சிப் பணியாளராகவும் அரசியலில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதை நாம் பார்த்துள்ளோம். இன்று அவர்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகிறோம். இதை வரவேற்கிறோம், பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம், என்று கூறினார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று நாடு தழுவிய “நாரி சக்தி வந்தன் ஓட்டத்தை” ஏற்பாடு செய்தது.

பாட்னா மற்றும் ஜெய்ப்பூரில் இன்று நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், டெல்லி, கட்டாக், மும்பை, இந்தூர்,ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 18 ) ஓட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஓட்டமும் சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஒவ்வொரு நகரத்திலும் முக்கிய பொது இடங்களில் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்குவதுடன் நிறைவடைகிறது.

மாணவிகள், தொழில்முனைவோர், விளையாட்டு வீராங்கனைகள், சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b