தமிழகத்தில் நாளை ராகுல் காந்தி பிரச்சாரம்!
தமிழ்நாடு, 17 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நாளை காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ராகுல்
ராகுல் காந்தி


தமிழ்நாடு, 17 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ராகுல் காந்தி, காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார்.

அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்.

பின்னர் சோளிங்கர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதையடுத்து சென்னை திரும்பி, அங்கிருந்து திருச்சி புறப்பட்டு துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடர உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரே நாளில் மூன்று இடங்களில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்த பிரச்சாரம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam