உலக பாரம்பரிய தினம் -இன்றைய முக்கிய நிகழ்வுகள்
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த வி
வி


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது.

அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது.

இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.

முக்கிய நிகழ்வுகள்:

1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார்.

1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.

1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கோட்பாட்டு இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J