பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்
D


புதுடெல்லி, 18 ஏப்ரல் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஆனால், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மசோதாக்கள் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் அவை நிறைவேறாமல் போனது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA