தமிழகத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாடு, 18 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, கூட்டணி வேட்பாளர
ராகுல்


தமிழ்நாடு, 18 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டம் மாலை நேரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி சென்னையில் முதலில் பொன்னேரி தொகுயில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

அதைத்தொடர்ந்து சோளிங்கர் தொகுதி பிரச்சாரம் செய்யும் அவர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூருக்கு செல்ல உள்ளார்.

பின்னர் சாலை வழியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சார நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்.

அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் காந்தியின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த தேர்தலில் அவரது பிரச்சாரம் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P