சென்னையில் காவலர்களிடம் தபால் ஓட்டு பதிவு இன்று தொடங்கியது
சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள சென்னை நகர காவல்துறையினருக்கான தபால் ஓட்டு பதிவு இன்று தொடங்கியுள்ளது. பொதுவாக தேர்தல் நாளில் பணியில் இருப்பதால் நேரில் வாக்களிக்க முடியாத காவலர்களுக்கு,
தபால் ஓட்டு


சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள சென்னை நகர காவல்துறையினருக்கான தபால் ஓட்டு பதிவு இன்று தொடங்கியுள்ளது.

பொதுவாக தேர்தல் நாளில் பணியில் இருப்பதால் நேரில் வாக்களிக்க முடியாத காவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் இந்த தபால் ஓட்டு வசதியை வழங்கியுள்ளது.

இதற்காக சென்னை முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் நேரம் தவறாமல் வந்து, தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து தபால் ஓட்டை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த செயல்முறையை சீராக நடத்துவதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவலர்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களிக்க, வரிசை முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் தபால் ஓட்டு பதிவு பணிகளில் கலந்து கொள்ள முடியாத காவலர்களுக்காக, அடுத்த கட்டமாக நாளை மறுநாள் தபால் ஓட்டு பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், தேர்தல் பணியில் இருக்கும் அனைவரும் தங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த முடியும் என்பதே நோக்கமாகும்.

சென்னையில் மட்டும் மொத்தம் 18,971 காவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்ய உள்ளனர்.

இந்த தபால் ஓட்டு பதிவு நடவடிக்கை, தேர்தல் செயல்முறை சீராகவும், ஜனநாயக உரிமைகள் முழுமையாகவும் நிலைநிறுத்தப்படுவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P