ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறந்த நாள்- அன்னா கேன்டீன்களுக்கு ரூ.76 லட்சம் நன்கொடை
அமராவதி , 19 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி மாநிலம் முழுவதும் செயல்படும் 269 அன்
A


அமராவதி , 19 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இதையொட்டி மாநிலம் முழுவதும் செயல்படும் 269 அன்னா கான்டீன்களில் ஏழை மக்களுக்கு நாளை (ஏப்.20) இலவசமாக உணவு வழங்கப்பட உள்ளது.

இதற்காக

அவரது மனைவி புவனேஸ்வரி ‘அன்னா கான்டீன்கள்’க்கு ரூ.76 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

அமராவதியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், அன்னா கான்டீன் தலைமை செயல் அதிகாரிக்கு அவர் அந்த நன்கொடை காசோலையை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை தீர்க்கும் இந்த உயரிய திட்டத்தை அரசு மீண்டும் தொடங்கியது பாராட்டத்தக்கது.

வெறும் ரூ.5க்கு சுத்தமான சூழலில் மரியாதையுடன் உணவு வழங்கப்படுவது சிறப்பான செயல்.

தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனளித்து வருகிறது.

பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது மிகப் பெரிய திருப்தியை அளிக்கிறது.

இந்த ஆண்டிற்கான உங்கள் பிறந்தநாள் பரிசு இதுதான் என்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், தனது பேரன் தேவான்ஷின் பிறந்தநாளிலும் ஆண்டுதோறும் திருப்பதி அன்னபிரசாதத்திற்கு நிதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தனது பெயரில் ஒரு நாள் அன்னதானத்திற்கு நிதி வழங்கிய மனைவி புவனேஸ்வரியை முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டினார்.

மாநிலத்தில் அன்னதான திட்டத்தை ஒரு யாகம் போல முன்னெடுத்து வருகிறோம்.

திருப்பதியில் பல ஆண்டுகளாக நடைபெறும் அன்னதானத்தை முன்மாதிரியாக கொண்டு அன்னா கான்டீன் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

மேலும், பிறந்தநாள், திருமண நாள் போன்ற சிறப்பு நாட்களில் மக்கள் அன்னதானத்திற்கு நிதி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA