கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் - போலீசார் விசாரணை
தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச) தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குளி காலனியைச் சேர்ந்த பரமசிவன் (68). மீன்பிடி தொழில் செய்து வருகின்றார். இவர் தனக்குச் சொந்தமான பைபர் படகை வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரையில் முட்டு அளவு தண்ணீரில் நிறுத்தி வைத்திரு
Fiber Boat Parked on Beach Goes Missing


தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச)

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குளி காலனியைச் சேர்ந்த பரமசிவன் (68). மீன்பிடி தொழில் செய்து வருகின்றார். இவர் தனக்குச் சொந்தமான பைபர் படகை வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரையில் முட்டு அளவு தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று மாலை 5:30 மணி அளவில் படகு கடற்கரையில் பாதுகாப்பாக இருந்துள்ளது.

ஆனால், இன்று காலை 7:30 மணி அளவில் பரமசிவன் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தில் தேடியும் படகு கிடைக்கவில்லை என்பதால் இதனைத் தொடர்ந்து, பரமசிவன் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, படகு காற்றின் வேகத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது படகைத் திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காணாமல் போன சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b