Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
உளவியற்பியலை உலகுக்கு தந்த குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர்
(Gustav Theodor Fechner) 1801ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
நிறம், பார்வை குறித்து 1839-ல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.
இவரது பார்வை குணமான பிறகு மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
'உணர்வின் தீவிரம் எண்கணிதத் தொடரில் (Arithmetical Progression) அதிகரித்தால், அதைத் தூண்டும் ஆற்றல் பெருக்குத் தொடரில் (Geometrical Progression) அதிகரிக்க வேண்டும்' என்றார்.
இந்த ஆராய்ச்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற வெபர்-ஃபெச்னர் விதி (Weber-Fechner Law) பிறந்தது.
இயற்பியலிலும், வேதியியலிலும் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் நவம்பர் 18ஆம் தேதி 1887ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J