Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் டி.எல். லட்சுமண சிங்கிற்கு ஆதரவாக நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா சிலையிலிருந்து காந்தி சிலை வரை பேரணியாக சென்ற தொண்டர்கள் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் அதிமுகவுடன் இணைந்த பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
நகர செயலாளர் மயில் கணேஷ், மாநில நிர்வாகி வீ. அமீது, மேற்கு மண்டல பொறுப்பாளர் சலாவுதீன் அமீது உள்ளிட்டோர் தலைமையில் எஸ்டேட் பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியை விமர்சித்த வேலுமணி,
அதிமுக ஆட்சியில் வால்பாறையில் சாலைகள், படகு இல்லம் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
மேலும் வரவிருக்கும் தேர்தலில் லட்சுமண சிங்கை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நலத்திட்டங்களை குறிப்பிடும் வகையில், மகளிருக்கு உதவித்தொகை, குளிர்சாதனப் பெட்டி, பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டர் உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு நிகரான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டான்டீ தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், வீடு இல்லாதவர்களுக்கு நிலம் கையகப்படுத்தி வீடுகள் கட்டி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
வால்பாறை பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த கூட்டம் வால்பாறை பகுதியில் அதிமுக கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam