Enter your Email Address to subscribe to our newsletters

ஷிகோகாபாத் , 19 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோகாபாத் நகரின் காய்கறி சந்தையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கட்டுக்கடங்காமல் பரவிய தீ, அருகில் இருந்த துணிக்கடை சந்தை வரை சென்றடைந்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இது குறித்து தீயணைப்பு அதிகாரி சதேந்திர பாண்டே கூறுகையில்,
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காய்கறி சந்தையில் தொடங்கிய தீ, அருகில் உள்ள துணிக்கடை சந்தைக்கும் பரவியது.
அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை
என்று தெரிவித்தார்.
அதிகாலை நேரத்தில் வணிகர்கள் குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், காய்கறிகள், பழங்கள் மற்றும் துணிகள் என கடைகளில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் வணிகர்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்தும், மொத்த சேத மதிப்பு குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஷிகோகாபாத் நகரின் முக்கிய வணிக மையமாக விளங்கும் இந்த இரு சந்தைகளிலும் ஏற்பட்ட தீ விபத்து, உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b