Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த
கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
மூட நம்பிக்கை மீது எப்போதும் நம்பிக்கை கொள்ளாத இயக்கம் திமுக. அது எப்போது சத்தியத்தின் மீது நம்பிக்கைக் கொண்டது.
தமிழ்நாட்டு எம்.பி.க்களின் உதவியால் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது.
2023ல் கொண்டுவந்த மகளிர் மசோதாவை இப்போதுவரை பிரதமர் மோடி நிறைவேற்றாதது ஏன்?
மகளிருக்கும், சமூக நீதிக்கும் எதிரானவர் மோடி.
பாஜக கொண்டுவந்தது மகளிர் மசோதா அல்ல, தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சித்தது.
காங்கிரஸ், திமுக ஆகியவை மகளிருக்கு எதிரான கட்சிகள் கிடையாது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டவர் ராகுல் காந்தி. மோடி எங்காவது நடந்து சென்றிருக்கிறாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / Durai.J