Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் அரசியலுக்கு வரும் போது என்னிடத்தில் எதுவும் இல்லை. இம்முறை ஒரு மாற்றம் நிகழ வேண்டும். நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது.
வென்று மந்திரி ஆனால் 3 ஆயிரம், 4 ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் வாக்குக்கு காசு கொடுத்து செலவு செய்கிறார்கள்.
மற்றவர்களுக்கு இது தேர்தல்; எங்களுக்கு இது மாறுதல்.
கேரளாவில் முழுவதும் பச்சையாக இருக்கும்; அங்கங்கு வெள்ளை வீடுகள் இருக்கும். ஆனால் சென்னையில் அங்கங்கு பச்சை தெரியும், முழுவதும் கான்கிரீட் வீடுகள் தான் காணப்படும்.
காங்கிரசு, இரட்டை இலைக்கு செலுத்திய வாக்கை விவசாயிக்கு மாற்றுங்கள். நான் நாட்டை மாற்றுகிறேன்.
தண்ணீரையும் சாப்பாட்டையும் ‘டவுன்லோட்’ செய்ய முடியாது; அதை பெற விவசாயிகளிடம் தான் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு ஒரு மோசமான நாடகமாக மாறிவிட்டது.
மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கூட பிரேமலதா விஜயகாந்த் போதை கலாச்சாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக மாறிவிட்டது.
குடிப்பவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம். குடித்துவிட்டு வந்து யாருக்கு வாக்களிப்பீர்கள் என்பதையும் நம்ப முடியாது.
ஃப்ரிட்ஜ் கொடுத்தால் மின்சாரம் யார் கொடுப்பது?
அம்மா, அப்பா, மகன், மனைவி, மகள் என குடும்பத்தாருக்கு கடன் பட்டியல் வைத்திருப்பவர் உங்களுக்கு ₹2500 எங்கிருந்து கொடுப்பார்? என விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தும் அவர் பேசினார்
Hindusthan Samachar / P YUVARAJ