விருத்தாசலத்தில் பிரேமலதாவுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் – சர்ச்சைக்கு விளக்கம்
சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருத்தாசலம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரே பிரச்சார வாகனத்தில் இருவரும் இணைந்து வாக்கு சேகரித்தது கவனம் பெற்றது. அப்போ
Pre


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருத்தாசலம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒரே பிரச்சார வாகனத்தில் இருவரும் இணைந்து வாக்கு சேகரித்தது கவனம் பெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன்,

பிரச்சார மேடையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.

நான் திமுக கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சித் தலைவர் மட்டுமே. ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மேடையில் இருந்த அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் அறிமுகப்படுத்தினேன்.

அவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அறிமுகம் செய்வது முதல்வரின் பொறுப்பு.

அதுதான் அரசியல் மரபு என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பெயர் சொல்லப்பட்டபோது அவர் எழுந்து நிற்காமல் சிரித்துக் கொண்டிருந்தது குறித்து பரவி வரும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்,

அதை தவறாகப் புரிந்து கொண்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் ‘பத்துப்பாட்டு, எட்டுத்தொகை’ எப்படி முக்கியமோ, அதுபோல இந்த தொகுதிகளும் வெற்றிபெற வேண்டும், என்று கூறினார்.

தேமுதிக குறித்து பேசும்போது, அவர்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்துள்ளனர்.

அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். அதனால் தான் மு.க. ஸ்டாலின் அவர்களிடம், தேவையான அளவு தொகுதிகளை வழங்கலாம் என நான் கூறினேன்,என்றார்.

மேலும், விசிக - திமுக இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. அதை மக்கள் நம்ப வேண்டாம், என்றும் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் குறித்து பேசும் போது, விசிக வாக்குகளை கவர்வதற்காக என்னை பாராட்டி பேசியுள்ளார், என்று குற்றம் சாட்டினார்.

திரைப்பட ரசிகர்களை குறிவைத்து அவர் கூறியதாவது:

சினிமா மோகம் உள்ளவர்கள் நடிகர் விஜய் பக்கம் செல்வார்கள். விசிலடிக்கும் கலாசாரம் சட்டமன்றத்தில் இல்லை.

தியேட்டரில் தான் உள்ளது, என்று தெரிவித்தார்.

இந்த பேச்சு விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ