Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
சீத்தா வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சீத்தா மரம் வளர உகந்த காலநிலை 25° C முதல் 41° C வரையாகும்.பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28° F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் வளரக்கூடியது.
சீத்தா மரம் நன்றாக காய்க்கக்கூடியது.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும்.
அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும். சிறு கிளைகள் அதிகமாக இருக்கும்.
Hindusthan Samachar / Durai.J