திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் சாமி தரிசனம்
தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக தேர்தல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பொறுப்பாளர்கள் த
திருச்செந்தூர் கோவில்


தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக தேர்தல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பொறுப்பாளர்கள் தமிழகத்தில்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளரை

ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து

ஹெலிகாப்டர் மூலம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறு மேரி தனியார் தொழிற்சாலைக்கு

வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கோவிலில் மூலவர் சண்முகர் சத்ரு சம்கார மூர்த்தி ஆகிய

சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

தனியார் தொழிற்சாலையில்

இருந்து கார் மூலம் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சருக்கு

பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு

போடப்பட்டது.

மேலும் திருச்செந்தூர் டி.பி ரோடு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும்

மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்த வந்த நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி இல்லை.

இதனால் பொது மற்றும் கட்டண தரிசன

வரிசை வெறிச்சோடி காணப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam