உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அக்ஷய திருதியை வாழ்த்து
உத்தரகாண்ட், 19 ஏப்ரல் (ஹி.ச) வட மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19 ஆம் தேதி) கொண்டாடப்படும் அக்ஷய திருதியை, இந்து நாட்காட்டியில் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செழிப்பையும் நற்பேறையும் தருவதாக நம்பப்படும் இந்த நாள், புதிய த
ஹி.ச


உத்தரகாண்ட், 19 ஏப்ரல் (ஹி.ச)

வட மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19 ஆம் தேதி) கொண்டாடப்படும் அக்ஷய திருதியை, இந்து நாட்காட்டியில் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

செழிப்பையும் நற்பேறையும் தருவதாக நம்பப்படும் இந்த நாள், புதிய தொழில்களைத் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் வாங்கவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பிரார்த்தனை, தானம் மற்றும் ஆன்மிகச் சடங்குகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

'அக்ஷய' என்ற சொல்லுக்கு 'ஒருபோதும் குறையாதது' என்று பொருள். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் எல்லையின்றி விரிவடையும் என்றும், செய்யப்படும் நற்செயல்கள் நிலையான வெற்றியையும் பேறையும் தரும் என்றும் நம்பப்படுகிறது.

வைகாசி மாத சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் வரும் இந்த விழா, கிரிகோரியன் நாட்காட்டியின்படி பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் உகந்த கிரக அமைப்பு நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அக்ஷய திருதியை கலியுகத்தின் தொடக்கத்தையும் துவாபர யுகத்தின் முடிவையும் குறிக்கிறது என்று இந்து வேத நூல்கள் குறிப்பிடுகின்றன

இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இன்று அக்ஷய திருதியை முன்னிட்டு மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் தாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

மங்களம், செழிப்பு மற்றும் குறைவற்ற நற்பேறுகளின் புனித அடையாளமான அக்ஷய திருதியை எனும் இந்த மங்களகரமான தினத்தில், மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் புனிதத் திருவிழா உங்கள் வாழ்வில் முடிவில்லா மகிழ்ச்சி, அசைக்க முடியாத செழிப்பு மற்றும் உயர்ந்த செயல்களின் நிறைவேற்றத்தை கொண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்று முதல்வர் தாமி பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b