இந்திய குடியரசுத் துணைத் தலைவர் முதல் முறையாக இலங்கை பயணம்
புதுடெல்லி, 19 ஏப்ரல் (ஹி.ச.) இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ பயணம் இருநாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன்


புதுடெல்லி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ பயணம் இருநாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறுகிறது.

இலங்கைக்கு சென்றடைந்த துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனை அந்நாட்டு உயரதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.

பயணத்தின் போது, இலங்கை அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், கலாச்சார தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா–இலங்கை உறவை மேலும் வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முதலீட்டு முயற்சிகளையும் அவர் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டநாள் நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P