ஆர்.கே.ரோஜா மகள் அன்ஷு மாலிக்கிற்கு ஹெர்மன் பி. வெல்ஸ் விருது–2026’- ரோஜா பெருமிதம்!
ஹைதராபாத் , 19 ஏப்ரல் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி தலைவரான ஆர்.கே.ரோஜா மகள் அன்ஷு மாலிக் அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகம் வழங்கும் உயரிய ‘ஹெர்மன் பி. வெல்ஸ் விருது–2026’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந
R


ஹைதராபாத் , 19 ஏப்ரல் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி தலைவரான ஆர்.கே.ரோஜா மகள் அன்ஷு மாலிக் அவருக்கு,

அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகம் வழங்கும் உயரிய ‘ஹெர்மன் பி. வெல்ஸ் விருது–2026’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது,கல்வித் துறையில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சாதனை குறித்து ரோஜா தனது சமூக வலைதளப் பதிவில்,

ஒரு சிறிய கனவாக தொடங்கிய பயணம் இன்று பெருமையாக மாறியுள்ளது.

உன் உழைப்பு, அர்ப்பணிப்பு, துணிவு உன்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இது தொடக்கம் மட்டுமே என்று மகளை பாராட்டி உணர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அன்ஷு மாலிக் சிறு வயதிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவர்.

தற்போது இந்தியானாவில் உள்ள லூடி ஸ்கூல் ஆஃப் இன்ஃபார்மாட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

எதிர்காலத்தில் விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பது அவரது குறிக்கோளாகும்.

மேலும், கல்வியுடன் சேர்த்து சமூக சேவையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

2024-ஆம் ஆண்டு நைஜீரியாவில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் விழாவில் ‘சோஷியல் இம்பாக்ட்’ பிரிவில் விருதைப் பெற்றுள்ளார்.

ஹைதராபாத்தில் செயல்படும் ஒரு அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி செய்து வருகிறார்.

சிறுவயதிலேயே கோடிங் கற்றதுடன், ‘தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இந்த விருது, ஹெர்மன் பி. வெல்ஸ் அவர்களின் நினைவாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சமூக சேவை, தலைமைத்திறன் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அன்ஷு மாலிக் இந்த விருதைப் பெற்றிருப்பது கல்வி வட்டாரங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA