Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 02 ஏப்ரல் (ஹி.ச.)
வெளிநாட்டு நிதி பங்களிப்பு (FCRA) சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
FCRA சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மை அமைப்புகளை குறிவைத்து தாக்கும் வகையில் உள்ளன என குற்றம்சாட்டினார்.
மேலும், ஏற்கனவே வக்பு வாரிய சட்ட மாற்றங்கள் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பாதிக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், தற்போது வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு தற்காலிகமாக பின்வாங்கியதாக தோன்றினாலும், விரைவில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதாவை நிறைவேற்ற முயற்சி நடைபெறுவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
எனவே, இந்த அநியாயமான சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam