சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கு- 9 காவலர்களுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
மதுரை, 02 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை–மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவல்துறையினருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் இருந
சாத்தான்குளம் வழக்கு


மதுரை, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை–மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவல்துறையினருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து, 9 காவலர்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நீதிமன்றம் சமீபத்தில் அனைத்து 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தது.

இதையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட உள்ள தண்டனை குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam